நாடாளுமன்றத்திற்கு வழங்கி வந்த ரயில் உணவு சேவை - முடிவுக்கு வந்த 52 ஆண்டு கால பாரம்பரியம்

நாடாளுமன்றத்திற்கு வழங்கி வந்த ரயில் உணவு சேவை - முடிவுக்கு வந்த 52 ஆண்டு கால பாரம்பரியம்
நாடாளுமன்றத்திற்கு வழங்கி வந்த ரயில் உணவு சேவை - முடிவுக்கு வந்த 52 ஆண்டு கால பாரம்பரியம்
Published on

52 வருடமாக நாடாளுமன்றத்திற்கு உணவு வழங்கி வந்த வடக்கு ரயில்வேயின் சேவை முடிவுக்கு வந்தது.  

1968 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்திற்கான உணவு தேவையை பூர்த்தி செய்து வந்தது வடக்கு ரயில்வே. அந்த சேவையை வடக்கு ரயில்வே, கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் ஒப்படைத்தது. அதன் படி நாடாளுமன்ற மாளிகை வீடு, நாடாளுமன்ற இணைப்பு வீடு, நாடாளுமன்ற நூலக கட்டிடங்களில் உள்ள கேன்டின் சேவைகளை கையில் எடுத்துள்ளது.


2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய தினம் முதல் தனது உணவு சேவையை தொடங்க உள்ள இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், அதற்காக 5 ஸ்டார் தனியார் ஹோட்டலில் கை தேர்ந்த உணவு தயாரிக்கும் நிபுணர்களை கொண்டு, உணவை தயார் செய்து வழங்க இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் தனியார் ஹோட்டல் வழங்க உள்ள உணவு பட்டியலின் விலை ஹோட்டலில் வழங்கப்படும் உணவு பட்டியலின் விலையை மிக குறைவாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக 100 ரூபாய்க்கு கடாய் பன்னீர், காய்கறி கலவை, பச்சி, டால் சுல்தானி, பட்டாணி புலாவ், சப்பாத்தி, பச்சை காய்கறிகள், வெள்ளரி புதினா ரைத்தா, பாப்பாட் மற்றும் கலா ஜமுன் உள்ளிட்டவைக் கிடைக்கின்றன.

அதே போல 50 ரூபாய்க்கு கிடைக்கும் மினி தாலியில், காய்கறி கலவை, பச்சி, டால் சுல்தானி, ஜீரா புலாவ் ,சப்பாத்தி, பச்சைக்காய்கறிகள், பட்டாணி புலாவ், வெள்ளரி புதினா ரைத்தா, பாப்பாட் உள்ளிட்டவை கிடைக்கின்றன. 

இது மட்டுமல்லாமல் நொறுக்குத் தீனி உள்ளிட்ட 7 வகை உணவுகளுடன் காய்கறி மற்றும் மினி தாலியும் கிடைக்கிறது.

25 ரூபாய்க்கு நொறுக்குத்தீனியுடன் உப்புமாவும் இணைந்து கிடைக்கிறது. 50 பன்னீர் பக்கோடா 10 ரூபாய்க்கு சமூசா உள்ளிட்ட பல்வேறு உண்வுகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு அமர்விற்கும் 5000 நபர்களுக்கு உணவு வழங்கப்படும்.

நாளைக்கு பட்ஜெட் தாக்கலுக்கான அமர்வு நடக்க உள்ள நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் தொடங்கப்பட்டு ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com