50%க்கும் அதிக இந்தியர்கள், EMI கார்டுகளை பயன்படுத்தவே விரும்புகின்றனராம்! ஏன் தெரியுமா?

50%க்கும் அதிக இந்தியர்கள், EMI கார்டுகளை பயன்படுத்தவே விரும்புகின்றனராம்! ஏன் தெரியுமா?
50%க்கும் அதிக இந்தியர்கள், EMI கார்டுகளை பயன்படுத்தவே விரும்புகின்றனராம்! ஏன் தெரியுமா?
Published on

நாட்டில் 50%க்கும் அதிகமான மக்கள் EMI கார்டுகளை விருப்பமான பரிவர்த்தனை முறையாக பயன்படுத்துகின்றனர் என ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.

ஹோம் கிரெடிட் இந்தியா நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றில், இந்தியாவில் 50% க்கும் அதிகமான மக்கள் உடனடியாக பணம் செலுத்துவதை விட ஷாப்பிங் செய்ய EMI கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்த விரும்புகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் இ.எம்.ஐ மூலம் செலுத்துபோது, ஒரேநேரத்தில் அதிக பணச்சுமை இருக்காது என மக்கள் கருதுவதாக சொல்லப்படுகிறது.

மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, சென்னை, லக்னோ, பாட்னா மற்றும் ராஞ்சி உள்ளிட்ட 16 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் , மாதத்திற்கு சராசரியாக 30,000 வருமானம் கொண்ட 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 1,500 கடன் வாங்குபவர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

1,500 பேரில், 50% க்கும் அதிகமானோர் ஷாப்பிங் அல்லது பண பரிவர்த்தனைக்கான EMI கார்டுகளை விரும்புவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆய்வில் 75% கடன் வாங்குபவர்கள் நுகர்வோர் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டை புதுப்பித்தல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக கடன் வாங்கியுள்ளனர் மற்றும் 25 சதவீத மக்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தினர் என்றும் தெரியவந்துள்ளது.


இதில் பெங்களூரு (82%), பாட்னா (74%), லக்னோ (69%), லூதியானா (68%) மற்றும் ஜெய்ப்பூர் (68%) போன்ற நகரங்களில் வசிப்போரும் அடங்குவர். கணக்கெடுப்பின்படி, கடன் வாங்கியவர்களில் 40 சதவீதம் பேர், புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து தனிநபர் நிதி போன்ற துறைகளில் நிதி ரீதியாக கல்வி கற்க விரும்புவதாகக் கூறியுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com