கார் விற்பனை குறைந்ததால் செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதி ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் உள்ள ஆலைகளில் கார் உற்பத்தி நடைபெறாது என மாருதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை நிலவரத்தை வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 191 கார்களை விற்று மாருதி ஸ்விஃப்ட் முதலிடத்தை பிடித்தது. மாருதி நிறுவனத்தின் மற்றொரு காரான டிசயர் 21 ஆயிரத்து 37 என்ற எண்ணிக்கையுடன் 2வது இடத்திலும் 18 ஆயிரத்து 649 கார்களுடன் மாருதி பேலனோ 3வது இடத்திலும் உள்ளது.
மாருதியின் ஆரம்ப நிலை காரான அல்டோ 14 ஆயிரத்து 378 எண்ணிக்கையுடன் 4வது இடத்திலும் மாருதியின் மற்றொரு காரான விடாரா பிரெஸா 14 ஆயிரத்து 378 எண்ணிக்கையுடன் 5 வது இடத்திலும் உள்ளது. விற்பனை எண்ணிக்கையில் முதல் 6 இடங்களையும் மாருதி கார்களே இடம் பெற்றுள்ளன.
ஆனால் சமீபகாலமாக கார் விற்பனை குறைந்து வருகிறது. இதனால் சில நாட்களுக்கு முன்பு மாருதி 800 கார் தயாரிப்பை அந்நிறுவனம் நிறுத்தியது. இந்நிலையில், கார் விற்பனை குறைந்ததால் செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதி ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் உள்ள ஆலைகளில் கார் உற்பத்தி நடைபெறாது என மாருதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.