மாருதி சுசூகி தனது தயாரிப்பில் உருவான ‘ஸ்விஃப்ட்’, ‘பலேனோ’ வாகனங்களை மறுபடியும் தாங்களே திரும்ப பெற்றுக்கொள்வதாக செய்தி வெளியிட்டுள்ளது.
மாருதி இந்தியாவில் ஏழைகளின் வாகனம் என்பார்கள். பன்னாட்டு கார்களின் வரத்துக்கு பிறகு மாருதியின் பன்மடங்கு வளர்ச்சி அழுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும் உலக நாடுகளின் தரத்தோடு மாருதி சக கார்களுக்கு இணையாக தனது சந்தையை நிறுவி உள்ளது. ஆனால் அடிக்கடி அதன் தயாரிப்புகளில் சில பின்னடைவுகள் எழவே செய்கிறது. அதன் ஒரு பகுதியாக மாருதி தனது தயாரிப்பான ‘ஸ்விஃப்ட்’, ‘பலேனோ’ கார்களை திரும்பு பெற்றுக் கொள்ள இருக்கிறது என்ற செய்தி வெளியாகி உள்ளது. மாருதி ஓம்னி, வேகன் ஆர், மாருதி இக்னிஸ், மாருதி செலிரியோ எக்ஸ் என பல மாடல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அவர்கள் வெளியிட்ட பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் மாடல்களில் சில சிக்கல்கள் உண்டாகின. அதனை அந்நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வி கண்டறிந்தது. அதனை உறுதி செய்த அந்நிறுவனம் டிசம்பர் 1, 2017 முதல் மார்ச் 16, 2018 வரை உற்பத்தி செய்யப்பட்ட பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் ரக மாடல் கார்களில் பிரேக் வேக்கம் ஹோஸில் கோளாறு உள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் அவர்களின் உற்பத்தியில் வெளியான 52 ஆயிரம் கார்களை திரும்ப எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் இவ்வாறு வாகனங்களை திரும்ப பெறுவது முதல் தடவையல்ல; பல முறை இதைபோல நடந்துள்ளது.