மியூச்சுவல் ஃபண்ட்களைப் பொறுத்தவரை முதலீட்டாளர்களிடையே இண்டெக்ஸ் ஃபண்ட்கள் பிரபலமாக உள்ளன, ஏனெனில் அவை பல்வேறு வகையான பங்குகளின் உரிமையை முதலீட்டாளருக்கு உறுதியளிக்கின்றன. அதிக பல்வகைப்படுத்தல், குறைந்த ரிஸ்க் மற்றும் இவை அனைத்தும் குறைந்த செலவில் கிடைக்கின்றன. அதனால்தான் பல முதலீட்டாளர்கள், குறிப்பாக ஆரம்பநிலை முதலீட்டாளர்கள், தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதை விட, கலவையாக இருக்கும் இண்டெக்ஸ் ஃபண்ட்கள் சிறந்த முதலீடுகளாக இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். இந்த இண்டெக்ஸ் ஃபண்ட்களில் புதிய வரவாக, நிப்பான் இந்தியா நிறுவனம் சார்பாக சந்தைக்கு நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ் ஃபண்ட்டிற்கான என்.எஃப்.ஓ (Nifty Bank Index Fund Direct - NFO) பொதுச்சந்தா பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கியுள்ளது. இச்சந்தாவானது இம்மாதம் 5-ம் தேதி தொடங்கி, 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்திட்டத்திற்கு ஒதுக்கீட்டுத் தேதியாக பிப்ரவரி 16-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒன்று நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். டிசம்பர், 2023 நிலவரப்படி, இந்நிர்வாகத்தின் கீழ் ரூ. 3,77,654 கோடி சராசரி சொத்துக்கள் (AAUM) மற்றும் 225.44 லட்சம் ஃபோலியோக்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஃபண்ட் திட்டமானது நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ் சார்ந்த பங்கு, பங்கு சார்ந்த பத்திரங்கள் மற்றும் இக்கலவையைப் பிரதிபலிக்கும் போர்ட்ஃபோலியோக்களில் முதலீடு செய்வதால், நீண்ட கால மூலதன மதிப்பீட்டை உருவாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.
முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம் மற்றும் அதற்கு மேல் ரூபாய் ஒன்றின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.
இந்த இண்டெக்ஸ் ஃபண்ட் திட்டத்தில் என்ட்ரி லோட் மற்றும் எக்ஸிட் லோட் இல்லை. அதாவது முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் தங்கள் வருவாயை முதலீடு செய்யவும், மீட்டுக்கொள்ள மற்றும் மாற்றவும் எதையும் செலுத்த வேண்டியதில்லை.
*வரும் காலங்களில் இதில் மாற்றங்கள் இருக்கலாம்.
நிஃப்டி வங்கி குறியீட்டை உருவாக்கும் பத்திரங்களில் முதலீடு - குறைந்தபட்சம் 95 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதம் வரை!
ரொக்கம் & ரொக்கத்திற்குச் சமமானவை மற்றும் பணச் சந்தை கருவிகள், ரிவர்ஸ் ரெப்போ, ட்ரைபார்ட்டி ரெப்போ அரசுப் பத்திரங்கள் அல்லது கருவூலப் பில்கள், பணச் சந்தை / லிக்விட் திட்டங்களின் அலகுகள் - இவற்றில் அதிகபட்சமாக 5 சதவிகிதம் வரை!
நிப்பான் இந்தியா நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ் ஃபண்ட்டின் ஃபண்ட் மேனேஜராக ஹிமான்ஷூ மாங்கே செயல்படுவார்.
திட்டத்தின் முதலீட்டு நோக்கம் அடையப்படும் என்பதற்கு எந்த உறுதியும் அல்லது உத்தரவாதமும் இல்லை என்பதாலும், திட்டத் தகவல் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி இந்தத் திட்டமானது “மிக அதிக ரிஸ்க்” கொண்டது என்பதாலும், முதலீட்டாளர்கள் தங்கள் நிதி ஆலோசகர்களின் அறிவுரைக்கேற்ப செயல்படவும்.