பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று இறக்கத்துடன் வர்த்தகமாகின்றன.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று இறக்கத்துடன் வர்த்தகமாகின்றன. காலை 10.30 மணி அளவில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 347 புள்ளிகள் சரிந்து 79,120 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 94 புள்ளிகள் சரிந்து 24,202 புள்ளிகளில் வர்த்தகமானது.

அமெரிக்க பங்குச் சந்தைகளைத் தொடர்ந்து மற்ற ஆசிய பங்குச் சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகின்றன. அந்நிய முதலீட்டாளர்கள் நேற்று 3,314 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பங்குகளை விற்றுள்ளனர். கடந்த 4 நாட்களில் அந்நிய முதலீட்டாளர்கள் 20,228 ரூபாய் மதிப்பீட்டில் பங்குகளை விற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com