இந்திய பங்கு சந்தை முதன்முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் இடையே $5 டிரில்லியன் மார்க்கெட் கேப்பிடலை கடந்துள்ளது. இது $4 ட்ரில்லியனில் இருந்து வர எடுத்துக்கொண்ட காலம் வெறும் ஆறு மாதம் மட்டுமே, சரியாக சொல்வதென்றால் 117 நாட்கள். தேர்தல் பயம், அமெரிக்க வட்டி விகித பிரச்னை & உலக நாடுகளிடையே நிலவும் சண்டைகளுக்கு மத்தியில் இந்திய பங்கு சந்தைகள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க மதிப்பை கடந்து உள்ளன.
இதன் மூலம், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் போன்ற $5 டிரில்லியனுக்கும் மேற்பட்ட மார்க்கெட் கேப்பிடல் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்திய பங்கு சந்தையும் இணைத்துள்ளது.
இந்த உயர்வின் மூலம் ஒட்டுமொத்த உலக மார்க்கெட் கேப்பிடலில் இந்தியாவின் பங்கு 4.19% ஆக உயர்ந்து உள்ளது .
இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவின் மார்க்கெட் கேப்பிடல் 11.5% வளர்ச்சி அடைந்து உள்ளது .
இந்த வளர்ச்சிக்கு பெரிய பங்காற்றிய 5 நிறுவனங்களாக RIL , SBI, LIC, Airtel & Hindustan Zinc உள்ளன.
இந்தியாவின் மார்க்கெட் கேப்பிடல் -மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (Marketcap to GDP ratio) 15 ஆண்டுகளில் அதிகபட்சமாக 140.2% ஐ எட்டியுள்ளது, இது உலகளாவிய தரநிலைகளால் நிர்ணயிக்கப்பட்ட சிறந்த வரம்பை கணிசமாக மீறுகிறது.
Forward PE மதிப்பு 50 ஐ கடந்த பங்குகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்து உள்ளது . முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர், குறிப்பாக சிறிய மற்றும் மிட்கேப் பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர்.
பொதுத்துறை நிறுவனங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட New age கம்பெனிகள் அனைத்தும் அதிக மதிப்பில் இருப்பதாக அவர் கூறுகிறார் . சிறு முதலீட்டாளர்கள் இவற்றில் எச்சரிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டும் .
அதே நேரத்தில் மதிப்பு உச்சத்தில் இருந்தாலும் இந்த சந்தையிலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 12-15% வருமானத்தை எதிர்பார்க்கலாம் என Mirae Asset நிறுவனத்தின் Surana கூறுகிறார் . அவருடைய பார்வையில் சில தனியார் வங்கிகள் , பார்மா, consumption & ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் கம்பெனிகள் கவர்ச்சிகர மதிப்பில் உள்ளதாக கூறுகிறார் .
முதலீட்டாளர்கள் மொத்தமாக முதலீடு செய்யாமல் SIP முறையில் மல்டி கேப் & hybrid fund களில் முதலீடு செய்யவும் அறிவுறுத்துகிறார்.