புதிதாக அறிமுகமாகியுள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.
மஹிந்திரா நிறுவனத்தின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் (Scorpio N) புதுமுக காருக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதில் 30 நிமிடங்களில் 1 லட்சம் கார்களை முன்பதிவு செய்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுபோன்ற எந்தவொரு தயாரிப்பிற்கும் முன்பதிவு இந்தளவு வேகத்தில் குவிந்தது இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை திட்டத்தின் கீழ் ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் தங்களின் முன் பதிவில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.