ஸ்மார்ட்போன் வர்த்தகத்திலிருந்து வெளியேறுகிறது எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்!

ஸ்மார்ட்போன் வர்த்தகத்திலிருந்து வெளியேறுகிறது எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்!
ஸ்மார்ட்போன் வர்த்தகத்திலிருந்து வெளியேறுகிறது எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்!
Published on

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இது குறித்த செய்தி தகவலாக வெளிவந்த நிலையில்  தற்போது உறுதி ஆகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்களின் பங்கு அதிகம் இருக்கின்ற சூழலில் இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்துள்ளது. 

எல்ஜி நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம் ஸ்மார்ட்போன் வணிகத்தில் சந்தித்த தொடர் நஷ்டம் தான் என தெரியவந்துள்ளது. 2020இல் மட்டும் சுமார் 751 மில்லியன் அமெரிக்க டாலர்களை மொபைல் பிரிவில் இழந்துள்ளது அந்நிறுவனம். 

கூகுள், பேஸ்புக், வோக்ஸ்வேகன் உட்பட பல நிறுவனங்கள் எல்ஜியின் மொபைல் பிரிவை வாங்க ஆர்வம் செலுத்தி வந்தன. இருப்பினும் வணிக ரீதியிலான பேச்சுவரத்தையில் இறுதி முடிவு எட்டப்படாததால் அந்த முயற்சிகள் கைகூடாமல் போனது.  

அதே நேரத்தில் மடிக்கும் வகையிலான ரோலபில் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் இறுதியில் வெளியட எல்ஜி திட்டமிட்டு வருகிறதாம். இருப்பினும் அதில் எந்தவித தெளிவான தகவலும் இதுவரை அறிவிக்கவில்லை. நீண்ட நாட்களாவே இந்த பணியில் அந்நிறுவனம் ஈட்டுபட்டு வந்துள்ளது. 

எல்ஜி நிறுவனம் தனது பயணத்தை ஸ்மார்ட்போன் பிரிவில் நிறுத்திக் கொண்டாலும் புதிய கான்செப்டுகளை தயங்காமல் முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றது என்றென்றும் ஸ்மார்ட்போன் பிரியர்களின் மனதில் நிறைந்திருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com