ஒரே பர்ச்சேஸ்... ஆசியாவின் மிகப்பெரிய கண் கண்ணாடி பிராண்ட் ஆன லென்ஸ்கார்ட்!

ஒரே பர்ச்சேஸ்... ஆசியாவின் மிகப்பெரிய கண் கண்ணாடி பிராண்ட் ஆன லென்ஸ்கார்ட்!
ஒரே பர்ச்சேஸ்... ஆசியாவின் மிகப்பெரிய கண் கண்ணாடி பிராண்ட் ஆன லென்ஸ்கார்ட்!
Published on

ஓண்டேஸ் (owndays) நிறுவனத்தை பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது லென்ஸ்கார்ட்

ஜப்பானை சேர்ந்த ஓண்டேஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி இருக்கிறது லென்ஸ்கார்ட். இதன் மூலம் ஆசியாவின் பெரிய கண் கண்ணாடி நிறுவனமாக மாறி இருக்கிறது.

இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, தாய்வான், பிலிபைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட 13 நாடுகளில் லென்ஸ்கார்ட் செயல்பட தொடங்கி இருக்கிறது. இந்த முதலீட்டின் மதிப்பு 40 கோடி டாலர்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லென்ஸ்கார்ட் முதலீடு செய்வதன் மூலம், ஒண்டேஸ் நிறுவனத்தில் உள்ள பிற முதலீட்டாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.

ஓண்டேஸ் நிறுவனம் 1989-ம் ஆண்டு டோக்கியோவில் தொடங்கப்பட்டது. 2013-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் செயல்பட தொடங்கியது. தற்போது ஜப்பானுக்கு வெளியே 12 நாடுகளில் செயல்பட்டுவருகிறது. ஜப்பானுக்கு வெளியே 460 ஸ்டோர்கள் செயல்பட்டுவருகின்றன.

ஓண்டேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் பங்குதாரர்களாகவும் நிறுவனத்தை வழிநடத்துபவர்களாகவும் இருப்பார்கள். மேலும் ஓண்டேஸ் நிறுவனம் தனி பிராண்டாக தொடரும்.

டி2சி நிறுவனங்களில் முக்கியமான பிராண்ட் லென்ஸ்கார்ட். 2010-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 2019-ம் ஆண்டு யுனிகார்ன் நிலையை எட்டியது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 430 கோடி டாலர்கள்.

டெல்லியில் கண்ணாடி ஆலையை கட்டமைத்துவருகிறது. 15 கோடி டாலர் முதலீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட்டுவருகிறது. இந்த ஆலை மூலம் ஆண்டுக்கு 5 கோடி ( ஜோடி) கண்ணாடிகள் தயாரிக்க முடியும்.

ஆன்லைன் மூலம் கண்ணாடி விற்பனை செய்வதுமட்டுமல்லாமல், சுமார் 1100 பிரான்ஸைசி ஸ்டோர்களை நடத்திவருகிறது. தவிர நடப்பு நிதி ஆண்டில் மேலும் 400 ஸ்டோர்களை திறக்கவும் லென்ஸ்கார்ட் திட்டமிட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டு முடிவில் லென்ஸ்கார்ட் லாப பாதைக்கு திரும்பும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது ஆண்டுக்கு ஒரு கோடி இணை கண்ணாடிகளை விற்பனை செய்கிறது. 2 கோடிக்கும் மேலானவர்கள் இந்த செயலியை டவுண்லோடு செய்திருக்கிறார்கள். லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் பல்கான் எட்ஜ், சாப்ட்பேங்க், கேகேஆர், டெமாசெக், பிரேம்ஜி இன்வெஸ்ட் உள்ளிட்ட பல முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com