எடைகுறைவான நகைகள் மீது மோகம் அதிகம்

எடைகுறைவான நகைகள் மீது மோகம் அதிகம்
எடைகுறைவான நகைகள் மீது மோகம் அதிகம்
Published on

தீபாவளி பண்டிகைக்கால புதிய அறிமுகங்கள் சந்தைக்கு வர தொடங்கியிருக்கின்றன. புத்தம்புது ரக ஆடைகளோடு தங்க நகைகளிலும் புதிய ரகங்கள் வந்துள்ளன.
பண்டிகை நாளையொட்டி பெண்கள் தங்களது தங்க வேட்டையை தொடங்கியுள்ளனர். நகைகளில் புதிய டிசைன்களை தேடும் பழக்கம் 75 சதவித இந்திய பெண்களிடம் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும், வளையல் திருவிழா, காதணி மேளா என நகைக்கடைகள் தனித்தனி விழாக்கள் எடுப்பது இதனால்தான். நவீன மாடல்களை விரும்புகின்றவர்களின் ட்ரெண்டில் இருப்பது லைட் வெயிட் எனப்படும் எடைக் குறைவான நகைகள்தான். 

பார்வைக்கு‌ பெரிதாகவும், எடை குறைவாகவும் நகைகள் இருக்க வேண்டும் என பலரும் விரும்புவதால் வியாபார நிறுவனங்களும் அதையே அதிகம் அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளன. அதே போல இந்த வருடம் மோகன்லால் பாடல் வரிகளில் ஜிமிக்கி கம்மல் பிரபலமடைந்ததால் இளம் பெண்களிடம் ஜிமிக்கி கம்மல் ஆசை அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com