ஏப்ரல்:1. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 608 ரூபாய் உயர்வு

ஏப்ரல்:1. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 608 ரூபாய் உயர்வு
ஏப்ரல்:1. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 608 ரூபாய் உயர்வு
Published on

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 608 ரூபாய் அதிகரித்து 33,904 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 33,296 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து 608 ரூபாய் அதிகரித்து 33,904 ரூபாய்க்கு சவரன் தங்கம் விற்கப்படுகிறது. கிராம் தங்கம் நேற்று 4,162 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 76 ரூபாய் உயர்ந்து 4,238ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை நேற்று 36,168 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 36,776 ரூபாயாக மாறியுள்ளது. கிராம் தங்கம் நேற்று 4,521 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,597 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 68 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 68,700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

முன்னதாக இன்று காலை சவரன் தங்கம் 512 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில் தற்போது 608 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com