அமேசானை விற்று ராக்கெட் கம்பெனி: ஜெப் பியோஸ் ஐடியா

அமேசானை விற்று ராக்கெட் கம்பெனி: ஜெப் பியோஸ் ஐடியா
அமேசானை விற்று ராக்கெட் கம்பெனி: ஜெப் பியோஸ் ஐடியா
Published on

அமேசானின் நிறுவனர் ஜெப் பியோஸ், அந்த நிறுவனத்தில் உள்ள நூறு கோடி ரூபாய் மதிப்பிலான தமது பங்குகளை வருடா வருடம் விற்று புளூ ஆர்ஜின் என்ற ராக்கெட் கம்பெனியை தொடங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெப் பியோஸ் தொடங்கவிருக்கும் புளூ ஆர்ஜின் ராக்கெட் நிறுவனம், பணம் கட்டும் பயணிகளை, 11 நிமிட விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும். தொடக்கத்தில், ராக்கெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய, வருடா வருடம் அமேசானின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்கப்போவதாக அவர் தெரிவித்தார். புளூ ஆர்ஜின் ராக்கெட் நிறுவனம் சேவையை தொடங்கிய பின், லாபம் தரும் நிறுவனமாக இயங்கும் எனவும் விண்வெளிக்குச் செல்லும் செலவை குறைப்பதே அந்த நிறுவனத்தின் நோக்கமாக இருக்கும் எனவும் ஜெப் பியோஸ் தெரிவித்தார்.

தற்போது புளூ ஆர்ஜின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ராக்கெட்டுகள் மற்றும் காப்ஸ்யூல்களை பயன்படுத்தி, பயணிகளை பூமியில் இருந்து மேலே, 62 கீ.மீ. வரை கொண்டு செல்லலாம். அங்கு பயணிகள் தாங்கள் மிதப்பதை உணர முடியும். இதற்கான முன்னோட்டங்கள் 2015-ம் ஆண்டிலிருந்து நடைப்பெற்று வருகிறது.

மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்டுகள் மற்றும் காப்ஸ்யூல்களை தயாரிப்பதன் மூலம் விண்வெளிக்குச் செல்லும் கட்டணத்தைக் குறைக்கலாம் என ஜெப் பியோஸ் தெரிவித்தார்.

ஜெப் பியோஸ், அமேசான் நிறுவனத்தில் 16.5 சதவீத பங்குகளை, அதாவது 80.9 மில்லியன் பங்குகளை வைத்துள்ளார். அவர் ராக்கெட் நிறுவனம் தொடங்க 100 கோடி ரூபாய் மூதலீடு பெறுவதற்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குகளை விற்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com