ஜி.எஸ்.டியால் மழையாய் பொழியும் சலுகைகள் - மகிழ்ச்சியில் ஷாப்பிங் பிரியர்கள்

ஜி.எஸ்.டியால் மழையாய் பொழியும் சலுகைகள் - மகிழ்ச்சியில் ஷாப்பிங் பிரியர்கள்

ஜி.எஸ்.டியால் மழையாய் பொழியும் சலுகைகள் - மகிழ்ச்சியில் ஷாப்பிங் பிரியர்கள்
Published on

ஷாப்பிங் பிரியர்களுக்கு உகந்த நேரமிது. ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட உள்ள நிலையில், பல நிறுவனங்களும் தங்கள் ஸ்டாக்கை விற்று முடிப்பதற்காக ப்ரீ ஜிஎஸ்டி சலுகைகள் அள்ளி வழங்கப்படுகின்றன.

ஃப்யூச்சர் குழுமத்தின் பிக் பஜார், ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு முதல், தனது பொருட்களுக்கு 22% வரை விலைச்சலுகை அறிவித்துள்ளது. ஆன்லைன் போர்ட்டல் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், நேற்றிலிருந்தே தனது ப்ரீ ஜிஎஸ்டி சலுகையை தொடங்கியுள்ளது. மற்றொரு முன்னணி ஆன்லைன் நிறுவனமான அமேசான், எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 40% முதல் 50% வரை சலுகைகளுடன் தனது சலுகை விழாவைத் தொடங்கியுள்ளது.

இன்ஃபினிட்டி ரீடெய்லின் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி ரித்தேஷ் கோயல் இதுகுறித்து கூறும்போது, “எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்கள், ஆறு மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்ய பெரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஏனெனில், ஜி.எஸ்.டிக்கு பிறகு, அந்த பொருட்களில் அவர்களுக்கு முழுப்பலன் எதுவும் கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார்.

மொபைல் வாலட் நிறுவனமான பேடிஎம், தனது ஆன்லைன் ஸ்டோரான பேடிஎம்மின் மாலில், சலுகை விலை விற்பனையில், கடந்த மாதத்தை விட மூன்று மடங்கு விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்குப் பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என கணிக்கப்படும் நிலையில், எலக்ட்ரானிக் பொருட்களுக்கான ப்ரீ-ஜி.எஸ்.டி விற்பனையால், குறைந்த விலை ஷாப்பிங்கில் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com