ரிசைன் பண்ணுங்க: சீனியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் செக்!

ரிசைன் பண்ணுங்க: சீனியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் செக்!
ரிசைன் பண்ணுங்க: சீனியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் செக்!
Published on

தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் அளவில் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முனைப்பில் உள்ளன. இந்த பணி நீக்க நடவடிக்கையால் முதலில் 10 முதல் 20 ஆண்டுகள் அனுபவம் உடைய மூத்த ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

தொழில்நுட்ப துறையில் மந்த நிலை காரணமாகவும் அமெரிக்காவில் இருந்து அதிகமாக புது பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாலும், பணி நீக்கம் இந்த வருட இறுதியில் அதிகரிக்கும் என தெரிகிறது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் தனது நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த ஊழியர்களுக்கு, 9 மாத சம்பளத்தைக் கொடுத்து தானாக ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியது. இதன்மூலம் ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்ப உள்ளது காக்னிசன்ட். தனது தொழிலாளர்களில் 2.3 சதவீதம் பேரை, அதாவது 6000 ஊழியர்களை, விரைவில் பணி நீக்கம் செய்ய காக்னிசன்ட் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ.டி. பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர், தமிழக தொழிலாளர் நல ஆணையரிடம் தாங்கள் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப் படுவதாக புகார் அளித்துள்ளனர்.

மூன்று வாரங்களுக்கு முன்பு, விப்ரோ முதன்மை செயல் அலுவலர் அபித் அலி நீமுச்வாலா, ஊழியர்களிடம் பேசிய போது, நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்கவில்லை என்றால் இந்த வருடம் சுமார் 10% ஊழியர்கள் வேலையை விட்டு செல்லும் நிலை நேரிடும் என கூறினார்.

இதேபோல, கேப்ஜெமினி நிறுவனம் 9000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 35 முக்கிய பொறுப்பில் இருக்கும் ஊழியர்களை அந்த நிறுவனம் ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது.

பணி நீக்கம் குறித்து இன்போசிஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்களின் வேலை, மதிப்பீடு செய்யப்படுவதாகவும் அதன் அடிபடையில் பணி நீக்கம் நடைப்பெறுவதாகவும் கூறியுள்ளது.

’பொதுவாக 20% வளர்ச்சி இருக்கும் தொழில்நுட்ப துறையில், இந்த வருடம் 8% முதல் 10% தான் வளர்ச்சி இருக்கும் என தெரிகிறது. செலவுகளை குறைத்து கொள்ள வருடாவருடம் புதிய ஊழியர்களை நியமிப்பதால், தொழில்நுட்ப நிறுவனங்களில், மூத்த பணியாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் 3 வருடத்தில் இருந்து 7 வருடம் அனுபவம் இருக்கும் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில், ஊழியர்கள் தங்களது திறமைகளை காலத்துக்கு ஏற்றவாறு அதிகப்படுத்தி கொண்டால் மட்டுமே, தாக்குப்பிடிக்க முடியும்’ என கூறுகின்றனர் நிபுணர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com