சிறு நகரங்களில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிபிஓ--க்களை அமைத்து வேலை வாய்ப்பு அளிப்பதில் ஆந்திராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு நாட்டிலேயே 2ஆவது இடம் வகிக்கிறது.
STPI எனப்படும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா அமைப்பு இத்தகவலை தெரிவித்துள்ளது. சிறு நகரங்களிலும் ஐடி வேலை வாய்ப்பை உருவாக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தின் கீழ் ஆந்திராவில் 12 ஆயிரத்து 234 பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் இத்திட்டம் மூலம் 9 ஆயிரத்து 401 பேருக்கு ஐடி மற்றும் BPO வேலை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இந்தியாவில் சிறு நகரங்களில் ஐடி மற்றும் BPO துறைகளில் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் இதில் பயன்பெற்றவர்களில் 38% பேர் பெண்கள் என்றும் STPI தெரிவித்துள்ளது