குறைந்து வருகிறதா தொழிற்சாலைகளின் உற்பத்தி?

குறைந்து வருகிறதா தொழிற்சாலைகளின் உற்பத்தி?

குறைந்து வருகிறதா தொழிற்சாலைகளின் உற்பத்தி?
Published on

மத்திய புள்ளியியல் துறை நாட்டின் தொழிற்சாலை உற்பத்தி குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. 

மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO) ஒவ்வொரு மாதமும் நாட்டின் தொழிற்சாலை உற்பத்தி குறித்த தரவுகளை வெளியிடுவது வழக்கம். இந்தத் தரவுகள் அந்தந்த மாத தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி அளவை கணக்கிட்டு அதன் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கும்.  

அதன் அடிப்படையில் நவம்பர் மாத தொழிற்சாலைகளுக்கான உற்பத்தி தரவினை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அந்தத் தரவின்படி பார்த்தால் தொழிற்சாலை உற்பத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 0.5 சதவிகிதம்தான் உயர்ந்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் கடந்த ஆண்டு அக்டோபர் மாத தரவுகளின்படி பார்த்தால் இதன் வளர்ச்சி 8.2 சதவிகதமாக இருந்துள்ளது. ஒரே மாதத்தில் இந்தத் துறையின் வளர்ச்சி 7.8 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது வளர்ச்சியின் அளவு 0.5 சதவிகிதம்தான் இருக்கிறது.  

இந்த வளர்ச்சி சதவிகிதம் பல தனியார் வர்த்தக நிறுவனங்களின் கணிப்பைவிட மிகக் குறைந்து காணப்படுகிறது. உதாரணமாக, ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் கணிக்கீட்டின்படி கடந்த ஆண்டு நவம்பர் மாத வளர்ச்சி 3.6 சதவிகிதமாக இருக்கும் என்கிறது. அதேபோல, ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கணிப்புபடி நவம்பர் மாத வளர்ச்சி 4.1 சதவிகிதமாக இருக்கும் என்கிறது. ஆனால், இந்த இரண்டு கணிப்பிற்கும் மாறாக, மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் வளர்ச்சி சதவிகிதம் மிகவும் குறைந்த அளவிலே பதிவாகி இருக்கிறது. 

அதேபோல் துறைவாரியாக பார்த்தால் உலோகம் உற்பத்தியின் வளர்ச்சி 13.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. மின் சாதனங்களின் உற்பத்தி 9.6 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. எனினும், சுரங்க தொழில்(2.7%) மற்றும் மின்சார உற்பத்தி (5.1%) போன்ற துறைகளின் வளர்ச்சி உயர்ந்திருந்தது. ஆனால் அந்தத் துறையிலும் கடந்த அக்டோபர் மாத வளர்ச்சி சதவிகிததைவிட மிகவும் குறைந்த அளவே வளர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com