ஆப்பிள் ஐபோன் 6எஸ் தான் 2016-ல் அதிகமாக விற்ற ஸ்மார்ட்போன் என்று ஐஹச்எஸ் மார்கிட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதேபோல, 2017-ன் முதல் பாதியில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் அதிகம் விற்பவை எனவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
ஐபோன்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் போன் சந்தையில் மீண்டும் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது ஆப்பிள். ஆப்பிளின் பழைய மாடல் போன்களும் அதிகமாக விற்கப்படுகிறது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.
ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் இரண்டு போன்களும் 2016-ல் அதிகம் எற்றுமதி செய்யப்பட்ட போன்கள். அதிகம் விற்கப்பட்ட போன்களில், சம்சங் நிறுவனத்தின் வெவ்வேறு மாடல் போன்கள் ஐந்து இடத்தை பிடித்திருந்தன.
சீன நிறுவனமான ஒப்போவின் ஒரு மாடலும் டாப் 10-ல் இடம் பிடித்திருந்தது. போன்கள் ஏற்றுமதி செய்வதில் ஒப்போ நிறுவனம் நான்காவது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வு.