தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதில் சாமானியர்களுக்கான புதிய அறிவிப்புகள் என்னென்ன உள்ளது என்று பார்க்கலாம்.
1. ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படுகிறது. அதற்கான அய்வும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சில ஆண்டுகளில் புதிதாக 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில் 2,500 பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
4. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் உலக வங்கிகளிடம் இந்த திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அம்மா விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை மரணம் என்றால் 2 லட்சம் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரந்தர இயலாமைக்கும் 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. கனடாவில் டொரண்டோ பல்கலை கழகத்திலும் தமிழ் இருக்கை அமைத்திட உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.