பி.எஃப் மீதான வட்டி தடாலடியாக குறைப்பு: எத்தனை சதவிகிதம் தெரியுமா?

பி.எஃப் மீதான வட்டி தடாலடியாக குறைப்பு: எத்தனை சதவிகிதம் தெரியுமா?
பி.எஃப் மீதான வட்டி தடாலடியாக குறைப்பு: எத்தனை சதவிகிதம் தெரியுமா?
Published on

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.50%இல் இருந்து 8.10%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பதால் வட்டிவிகிதங்களை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார வளர்ச்சி என்பது மந்தமாகவே இருந்துவருவதால் தற்போது வட்டிவிகிதங்களை அதிகரிக்கவேண்டாம் என ரிசர்வ் வங்கி தனது கருத்தை தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் 2021- 22க்கான தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி 8.50%இல் இருந்து 8.10%ஆக குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டபோதிலும் கடந்த சில ஆண்டுகளாக பி.எஃப் மீதான வட்டி குறைக்கப்படவில்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளாக பி.எஃப் வட்டி விகிதம் 8.50% ஆக நீடித்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிற வட்டிவிகிதங்களைவிட இது சற்று அதிகமாகவே இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com