43% உயர்ந்த இன்ஃபோசிஸ் சிஇஒ சம்பளம் - எவ்வளவு தெரியுமா?

43% உயர்ந்த இன்ஃபோசிஸ் சிஇஒ சம்பளம் - எவ்வளவு தெரியுமா?
43% உயர்ந்த இன்ஃபோசிஸ் சிஇஒ சம்பளம் - எவ்வளவு தெரியுமா?
Published on

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேகின் சம்பளம் 43 சதவீதம் உயர்ந்து 71 கோடி ரூபாயாக இருக்கிறது. தற்போது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் உயரதிகாரியாக சலீல் ப்ரேக் இருக்கிறார். சமீப காலங்களில் நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாக இருந்ததால் இந்த ஏற்றம் என தெரிவித்திருக்கிறது. கடந்த 2020-21-ம் நிதி ஆண்டில் 49.68 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளமாக பெற்றிருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு 15 சதவீத வளர்ச்சியை இன்ஃபோசிஸ் நிறுவனம் அடைந்திருக்கிறது. 2018-ம் நிதி ஆண்டில் ரூ70,552 கோடியாக இருந்த வருமானம் கடந்த நிதி ஆண்டில் ரூ.1.21 லட்சம் கோடியாக  உயர்ந்திருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரியாக சலீல் நியமனம் செய்யப்பட்டார். தவிர அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இவர் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பார் என்றும் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 2027-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு வருவதற்கு முன்பாக கேப்ஜெமினி நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். இதற்கு முன்பாக இன்ஃபோசிஸ் நிறுவனர்கள் மட்டுமே தலைமை பொறுப்பில் இருந்தனர். முதல் முறையாக விஷால் சிக்கா தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் விஷாலுக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விலக நேர்ந்தது. அந்த பொறுப்புக்கு சலீல் பரேக் நியமனம் செய்யப்பட்டார்.

இதையும் படிக்கலாம்: ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com