இன்ஃபோசிஸ், விப்ரோ நிறுவனங்களில் சம்பள உயர்வு அறிவிப்பு

இன்ஃபோசிஸ், விப்ரோ நிறுவனங்களில் சம்பள உயர்வு அறிவிப்பு
இன்ஃபோசிஸ், விப்ரோ நிறுவனங்களில் சம்பள உயர்வு அறிவிப்பு
Published on

இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட டெக்னாலஜி நிறுவனங்கள் சம்பள உயர்வை சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருக்கின்றன. இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்திருக்கிறது.

சந்தையில் தேவை அதிகரித்திருக்கிறது. அதனால், ஒவ்வொரு நிறுவனங்களும் கூடுதல் பணியாளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றன. அதனால், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது வெளியேறுவோர் விகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில், திறமையான பணியாளர்களை ஊக்குவிக்கப்பதற்காக சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பிரவீண் ராவ் பேசி இருக்கிறார்.

ஏற்கெனவே கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாம் கட்ட ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியாவில் 19,230 பணியாளர்களையும் வெளிநாட்டு பிரிவுகளில் 1941 பணியாளர்களையும் புதிதாக நியமனம் செய்திருக்கிறது. புதிய பணியாளர்களை இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தெர்ந்தெடுக்க இன்ஃபோசிஸ் திட்டமிட்டிருக்கிறது.

முன்னதாக விப்ரோ நிறுவனமும் சம்பள உயர்வை அறிவித்திருந்தது. வரும் செப்டம்பர் முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்றும் 80 சதவீத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு இருக்கும் என்றும் விப்ரோ தெரிவித்திருக்கிறது. விப்ரோ நிறுவனம் கடந்த காலாண்டில் 7,700 பணியாளர்களை தேர்ந்தெடுத்தது. இந்த ஆண்டில் மேலும் 18,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.

மற்றொரு முக்கிய நிறுவனமான டிசிஎஸ் கடந்த ஏப்ரல் முதலே சம்பள உயர்வை அறிவித்திருந்தது. இந்தியாவின் பெரிய ஐந்து டெக்னாலஜி நிறுவனங்களில் மட்டும் 12.4 லட்சம் நபர்கள் பணியாற்றுகின்றனர். டெக்னாலஜி துறையில் 46 லட்சம் பணியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com