நாட்டின் மொத்த விலை பணவீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது
கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 12.94% ஆக இருந்ததாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரலில் மொத்த விலை பணவீக்க விகிதம் 10.49% ஆக இருந்ததே இதற்கு முந்தைய அதிகபட்ச அளவாகும். மே மாதத்தில் சில்லறை விலை பணவீக்கமும் 6.3% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத உயர்ந்த அளவு என்பதுடன் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்படுவதே பணவீக்கம் கடுமையாக உயரக் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்