இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 10 சதவிகிதம் அளவுக்கே வளர்ச்சி காணும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில், கொரோனா இரண்டாவது அலை இந்தியப் பொருளாதாரத்தை பாதித்துள்ளதால், பல மாநிலங்களில் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய மூன்று காலாண்டுகளிலும் பொருளாதார வளர்ச்சி வலுவான நிலையில் மீட்சிப்பாதையை அடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
எனவே, நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10 சதவிகித வளர்ச்சி காணும் என மதிப்பீடு செய்துள்ளது. முன்னதாக, இந்த வளர்ச்சி விகிதம் 11 சதவிகிதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.