"டிசம்பரில் சரிவு கண்ட இந்திய ஆட்டோமொபைல் வாகன விற்பனை" - FADA தகவல்!  

"டிசம்பரில் சரிவு கண்ட இந்திய ஆட்டோமொபைல் வாகன விற்பனை" - FADA தகவல்!  
"டிசம்பரில் சரிவு கண்ட இந்திய ஆட்டோமொபைல் வாகன விற்பனை" - FADA தகவல்!   
Published on

இந்தியாவில் கடந்த 2021, டிசம்பர் மாதத்தில் ஆட்டோமொபைல் சில்லறை வர்த்தக விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் மட்டும் 16 சதவிகிதம் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளதாக FADA தகவல்.

இருசக்கர வாகன விற்பனை 11 சதவிகிதம் மற்றும் பயணிகள் வாகனங்கள் (Passenger Vehicles) மற்றும் டிராக்டர்கள் 10 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் மொத்தம் 2,44,639 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020 டிசம்பரில் 2,74,605 வாகனங்களாக இருந்துள்ளது. 

செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் நெருக்கடியை எதிர் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

அதுவே இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் விற்பனையில் ஆரோக்கியமான ஏற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒமைக்ரான் திரிபு மற்றும் கொரோனா பரவல் அச்சத்தால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கை விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com