நடப்பு 2021-22 ஆம் நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக குறையும் என தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு பொருளாதாரம் குறைவான வேகத்திலேயே வளர்ச்சி கண்டு வருவதாகவும், தடுப்பூசி போடும் திட்டம் விரைவுபடுத்தப்பட்டால் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கை நிலையான அளவில் புத்துயிர் பெற உதவும் என ஃபிட்ச் கூறியுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உருவான கொரோனா பேரிடர் வங்கித்துறைக்கு மிகப்பெரிய சவால்களை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக குறையும் எனவும் ஃபிட்ச் கணித்துள்ளது.