"பொருளாதார பாதுகாப்பை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது" ஐஎம்எஃப் பாராட்டு

"பொருளாதார பாதுகாப்பை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது" ஐஎம்எஃப் பாராட்டு
"பொருளாதார பாதுகாப்பை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது" ஐஎம்எஃப் பாராட்டு
Published on

சர்வதேச பொருளாதார சூழல்களில் ஏற்படும் மாற்றத்தால் உள்நாட்டில் சிக்கல் ஏற்படாத அளவுக்கு இந்தியா தன்னை திறம்பட தற்காத்துக்கொண்டுள்ளது என ஐஎம்எஃப் எனப்படும் பன்னாட்டு நிதியம் பாராட்டியுள்ளது

ஐஎம்எஃப்பின் உதவி நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் உலகளாவிய முதலீடுகள் குறித்த விரிவான அறிக்கையை வாஷிங்டனில் வெளியிட்டார். இதன் பின் பேசிய அவர், கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா காலகட்டத்தில் இந்தியா முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளதாக குறிப்பிட்டார்.



தங்கள் முதலீட்டு சூழல் பாதிக்கப்படாத அளவுக்கு கட்டுப்பாடுகளையும், தற்காப்பு ஏற்பாடுகளையும் இந்தியா ஏற்கனவே செய்து வைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தற்போது சர்வதேச சூழல் சரியில்லாத நிலையில் இந்தியா தனது முதலீட்டு சூழலை திறம்பட கையாண்டு வருவதாகவும் கீதா கோபிநாத் குறிப்பிட்டார்.

சில நாடுகள் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு கடன்களை வாங்கி சிக்கலில் தவித்து வருவதாகவும் இது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடம் என்றும் கீதா கோபிநாத் அறிவுறுத்தினார். உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஆசியாவில் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பெரும் நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையிலும் ஐஎம்எஃப் இந்த கருத்தை தெரிவித்துள்ளது



Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com