ஜிஎஸ்டி நடைமுறையில் 5 சதவிகிதம் என்ற வரி அளவை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தற்போது 5,12,18,28 ஆகிய சதவிகித அளவுகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. தங்க நகைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும் 3 சதவிகித வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 சதவிகித வரி பிரிவில் வரும் பொருட்களில் சிலவற்றை அடுத்துள்ள 8 சதவிகித வரி பிரிவுக்கும் மற்றவற்றை 3 சதவிகித பிரிவுக்கும் மாற்றிவிட ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இது தவிர 5 சதவிகித பிரிவை 7 அல்லது 8 அல்லது 9 சதவிகிதமாக உயர்த்தலாமா என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி ஒவ்வொரு சதவிகிதம் உயர்த்தும்போதும் அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாத மத்தியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்த இறுதி முடிவு வெளியாகும்.