தொடரும் வாகன விற்பனை மந்தம்: ஹுண்டாய் ஆலையில் உற்பத்தி நிறுத்தம்

தொடரும் வாகன விற்பனை மந்தம்: ஹுண்டாய் ஆலையில் உற்பத்தி நிறுத்தம்
தொடரும் வாகன விற்பனை மந்தம்: ஹுண்டாய் ஆலையில் உற்பத்தி நிறுத்தம்
Published on

வாகன விற்பனை சந்தையில் மந்த நிலை நிலவி வரும் நிலையில் நாட்டின் 2வது பெரிய கார் நிறுவனமான ஹுண்டாயும் உற்பத்தி நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது

நடப்பு ஆண்டின் முதல் 4 மாதங்களில் கார், பைக் உள்ளிட்ட பயணிகள் வாகன உற்பத்தி 13 புள்ளி 8 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளதாக வாகன உற்பத்தியாளர் சங்கமான சியாம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 10 லட்சம் பேர் வேலை இழக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டது. இந்நிலையில் நாட்டின் 2வது பெரிய கார் நிறுவனமான ஹுண்டாயும் உற்பத்தி நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது

ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு தேதிகளில் உற்பத்தி நிறுத்தம் நடந்து வருவதாகவும் வரும் 31ம் தேதி வரை இது தொடரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹுண்டாயின் கார் ஆலை சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய ஹுண்டாய் செய்தித் தொடர்பாளர், இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாகனங்களுக்கான தேவை குறைந்துள்ளதாக தெரிவித்தார். உற்பத்தியை குறைப்பது உள்ளிட்ட வழிகள் மூலம் சூழலை சமாளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

வாகன விற்பனை குறைவால் டொயொட்டா உள்ளிட்ட பல முன்னணி வாகன நிறுவனங்களும் ஏற்கனவே குறிப்பிட்ட அளவில் உற்பத்திக் குறைப்பை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com