‘Satan’ ஷூவில் மனித ரத்தம் கலப்பு? - வழக்கு தொடர்ந்த நைக் நிறுவனம்!

‘Satan’ ஷூவில் மனித ரத்தம் கலப்பு? - வழக்கு தொடர்ந்த நைக் நிறுவனம்!
‘Satan’ ஷூவில் மனித ரத்தம் கலப்பு? - வழக்கு தொடர்ந்த நைக் நிறுவனம்!
Published on

‘Satan‘ ஷூவில் மனித ரத்தம் கலந்திருப்பது தொடர்பான பேச்சு பேருபொருளாகியுள்ளது.

அமெரிக்க பாடகரான Lil Nas X, நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் MSCHF என்ற கலை கூட்டு நிறுவனத்துடன் இணைந்து ‘Satan’ ஷூ என்ற பெயரில் ஷூவை தயாரித்திருந்தார். பார்பதற்கு அசப்பில் அப்படியே நைக் நிறுவனத்தின் ஷூ போலவே இருந்தது அது. அதற்கு அடையாளமாக நைக் நிறுவனத்தின் லோகோவும் அதில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் அந்த ஷூவின் சோல் (அடிப்பகுதி) ஒரு துளி மனித ரத்தம் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நைக் நிறுவனம் MSCHF மீது சட்ட ரீதியாக வழக்கு தொடர்ந்துள்ளது. அதோடு தங்களுக்கும் அந்த ஷூவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

MSCHF நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ரத்தம் தான் அதில் கலந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. பயங்கரமான ஆவிகளை மையப்படுத்திய கருப்பொருளில் இந்த ஷூ வடிவமைப்பு நடந்துள்ளது. இதன் விலை 1018 அமெரிக்க டாலர்கள். தோராயமாக இந்திய ரூபாயில் 74,482 ரூபாய். 

விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் இந்த ஷூ விற்று தீர்ந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com