அரசின் நிதி நிலை இந்தாண்டில் எப்படி இருக்கிறது. எதிபார்த்த வருவாய் கிடைத்ததா என்பதை பார்க்கலாம் விரிவாக பார்க்கலாம்.
அரசின் நிதிநிலை FISCAL DEFICIT அதாவது நிதி பற்றாக்குறை என்ற அளவுகோலின் படியே பெரிதும் கணக்கிடப்படுகிறது. 2020-21 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை 7 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் அதாவது 3.5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என கடந்த பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் ஆண்டு முடிவில் இது 7 சதவிகிதத்தை அதாவது 16 லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. கொரோனாவும் அதனால் ஏற்பட்ட தாக்கங்களாலும் அரசின் வருவாய் குறைந்து பொருளாதாரத்தை ஊக்குவிக்க தாராளமாக செலவு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுதான் பற்றாக்குறை அதிகரிக்க காரணம்.
இன்னொரு புறம் RADE DEFICITE எனப்படும் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசமான வர்த்தகப்பற்றாக்குறை கடந்த டிசம்பரில் 25 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்து ஆயிரத்து 544 கோடி டாலராகியுள்ளது.
ஏற்றுமதி 0.14% மட்டும் அதிகரித்து இறக்குமதி அதை விட அதிகமாக 7.56% ஆக அதிகரித்ததே இந்த எதிர்மறை நிலைக்கு காரணம். இவை தவிர அரசின் வரி வருவாய் கணிசமாக குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் 24 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 11 லட்சத்து 74 ஆயிரம் கோடிதான் வசூலாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரி உள்ளிட்ட நேரடி வரி வழிகளில் வருவாய் குறைந்தாலும் கடந்த டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் வரலாறு காணாத அளவு அதிகரித்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது. அரசின் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி பெரிதும் கை கொடுத்து வருகிறது.
கடந்த நவம்பர் வரையிலான 6 மாதங்களில் மட்டும் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி வகையில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 342 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது இலக்கை விட 47.7% அதிகம் ஆகும். ஆனால் பொன் முட்டையிடம் வாத்தாக பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனையை அரசு கருதும் நிலையில் அதற்கு இந்தாண்டு பெரிய அளவில் ஏமாற்றமே மிஞ்சியது. பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனையில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயை பெற அரசு இலக்கு வைத்த நிலையில் இந்தாண்டு வெறும் 17 ஆயிரத்து 957 கோடி ரூபாய்தான் கிடைத்தது.
வரும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கான அலைக்கற்றை விற்பனையில் 3 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என அரசு கணக்கிட்டுள்ளது. ஆனால் இத்தொகையில் சுமார் 10% மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்