தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். தமிழகம் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் மக்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம். 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.2,24,739 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.