ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் ஆன ‘ஹானர் 9ஏ’ வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் ஸ்மார்ட் போன் சந்தையில் தங்களது புதிய மாடல் போன்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜூன் 23ஆம் தேதியன்று புதிய ஸ்மார்ட்போனான ஹானர் 9ஏ வெளியிடப்படவுள்ளது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நடைபெறும் ஆன்லைன் நிகழ்ச்சியில் இந்த போன் வெளியிடப்படும் நிகழ்ச்சி ஒளிபரப்படவுள்ளது.
தண்ணீரில் விழுந்தாலும் பழுது அடையாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போனில், ஃபிங்கர் பிரிண்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் 3 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக, ஹானர் நிறுவனம் வெளியிட்ட ‘9 எக்ஸ் ப்ரோ’ மாடலில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்தது. ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தில் இந்த போன் செயல்படும். 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக மைக்ரோ சிப் கார்டு பொறுத்தி 512 ஜிபி வரை மெமரியை அதிகரித்துக்கொள்ள முடியும். கருப்பு, உலர் நீலம் உள்ளிட்ட நிறங்களில் வெளியாகிய இந்த போனின் விலை ரூ.17,999 ஆகும். இதன் சிறப்பம்சங்கள் சில, ஹானர் 9ஏ-ல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.