பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன்களுக்கான வட்டியை 0.05 சதவிகிதம் குறைத்துள்ளது.
நவம்பர் 1ம் தேதி முதல் வீட்டுக்கடன் வட்டி 8.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இதுதான் நாட்டிலேயே மிகக்குறைவான வீட்டுக்கடன் வட்டி விகிதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வாகனக் கடன்களுக்கான வட்டி 8.7 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதனால் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டும் மக்கள் பயன் பெறுவார்கள் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்பிஐயின் இத்தகைய முக்கியமான முடிவை அடுத்து பிற வங்கிகளும் வட்டிக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.