அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் சீனாவை இந்தியா மிஞ்சியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவில் நடப்பாண்டில் 235 ஒப்பந்தங்கள் மூலம் 3 ஆயிரத்து 776 கோடி டாலர்கள் அன்னிய முதலீடாக வந்துள்ளதாக டீலாஜிக் (DEALOGIC) என்ற சர்வதேச மூலதன சந்தை பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் சீனா நடப்பாண்டில் 3 ஆயிரத்து 200 கோடி டாலர்களை மட்டுமே ஈர்த்துள்ளதாகவும் அந்நிறுவனம் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது. அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவை இந்தியா மிஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வலுவான பொருளாதார அடிப்படைகள், அரசின் சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகளவில் அன்னிய முதலீடுகள் குவிய காரணம் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் அமெரிக்காவுடன் சீனா வர்த்தக மோதலில் ஈடுபட்டது அங்கு அன்னிய முதலீடுகள் குறைய காரணமாகிவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் சீனாவை இந்தியா மிஞ்சியுள்ளதாக வெளியான தகவலை திமுகவின் பார்வைக்கு வைப்பதாக பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் புகார் கூறி வந்த நிலையில் இந்த தகவலை அதற்கான விளக்கமாக அளிப்பதாக தமிழிசை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்