45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. அதில் பெட்ரோல் - டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்படக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் லக்னோவில் இன்று காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடவிருக்கிறது. அதில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் 11 வகையான கொரோனா மருந்துகளுக்கு கொடுக்கப்பட்ட வரிச்சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்தும், அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது. இதற்காக பெட்ரோல் -டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றியும் விவாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதிக்குப் பிறகு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நேரடியாகக் கூட இருப்பது குறிப்பிடத்தக்கது.