மாநிலங்களுக்கான ஏற்றுமதி திறன் - எந்ந மாநிலம் முதலிடம்?

மாநிலங்களுக்கான ஏற்றுமதி திறன் - எந்ந மாநிலம் முதலிடம்?
மாநிலங்களுக்கான ஏற்றுமதி திறன் - எந்ந மாநிலம் முதலிடம்?
Published on

நிதி ஆயோக்கின் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு 2021இல் குஜராத் மாநிலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

மாநிலங்களின் ஏற்றுமதிக்கான திறன் மற்றும் செயல்பாடுகள் எந்த அளவிற்கு தயார்நிலையில் இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நிதி ஆயோக் ஏற்றுமதிக்கான தயார்நிலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், 2ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ள குஜராத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

லட்சத்தீவு, அருணாசல பிரதேசம், மிஸோரம், லடாக் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் ஏற்றுமதி தயார்நிலை பட்டியல் 2021இல் கடைசி நிலைகளில் உள்ளன. மொத்த ஏற்றுமதியில் 70 சதவிகித பங்களிப்பை மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com