டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட 66 பொருட்கள் மீது நிர்ணயிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டது.
ஊறுகாய், தக்காளி சாஸ் மீதான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகிறது. முந்திரி மீதான வரி 12 சதவிகித்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கணினி அச்சு இயந்திரத்துக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 ஆக வரி குறைகிறது. ஜிஎஸ்டியில் சர்க்கரை நோயாளிகளுக்கு அவசியமான இன்சுலின் மருந்துகள், அகர்பத்தி மீதான வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் பை-க்கு 18 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.
வரியைக் குறைக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்து 133 பொருட்களின் பட்டியல் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 66 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் வருகிற 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது லாட்டரி மற்றும் மின்னணு பில் செலுத்துவதற்கான வரி முடிவு செய்யப்படவுள்ளது. பேட்டரி கார் உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் மீதான வரி நிர்ணயம் குறித்தும் 18-ம் தேதி கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.