தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு

தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு
தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு
Published on

தபால் நிலையங்களில் சேமிக்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை சிறிய அளவில் குறைத்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாவது காலாண்டில் இருந்து அதாவது ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில், ஓர் ஆண்டு முதல் மூன்றாண்டு வரையிலான சிறுசேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி 7.0 சதவீதத்தில் இருந்து, 6.9 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதே போல் ஐந்தாண்டு திட்டத்துக்கான வட்டி 7.8 சதவீதத்தில் இருந்து 7.7 ஆகவும், மூத்த குடிமக்களுக்கான ஐந்து ஆண்டு கால சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 8.0 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

செல்வ மகள் சேமிப்பு திட்ட வட்டி, 8.5 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 112 மாதங்களில் முதிர்ச்சி அடையும் கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான காலம் ஒரு மாதம் அதிகரிக்கப்பட்டு, வட்டியும் 7.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com