ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்திலும் கூகுள் முதலீடுகளை செய்துள்ளது.
ஏர்டெல்லில் 100 கோடி டாலர்களை முதலீடுகளை செய்வதன் மூலம் அந்நிறுவனத்தின் 1.28% பங்குகளை கூகுள் பெற உள்ளது. முன்னதாக 2 ஆண்டுகளுக்கு முன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 7.73% பங்குகளை கூகுள் வாங்கியிருந்தது.
ஜியோவை தொடர்ந்து தங்கள் நிறுவனத்திலும் கூகுள் நிறுவனம் முதலீடு செய்வது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏர்டெல், இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு சென்ற சேர்க்க பல முனை அணுகுமுறை தேவைப்படுவதாக கூறியுள்ளது