இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்து, கணிப்பை மாற்றிய கோல்ட்மேன் சாக்ஸ்!

இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்து, கணிப்பை மாற்றிய கோல்ட்மேன் சாக்ஸ்!
இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்து, கணிப்பை மாற்றிய கோல்ட்மேன் சாக்ஸ்!
Published on

அமெரிக்காவின் முக்கிய மதிப்பீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), இந்தியாவின் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி விகிதம் குறையும் என கணித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 11.7 சதவீதமாக இருக்கும் என முன்பு கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருந்தது. ஆனால், தற்போது 11.1 சதவீதமாக இருக்கும் என கணித்திருக்கிறது.

தேசிய அளவில் லாக்டவுன் இல்லை என்றாலும், கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தேவை குறையும். அதேபோல, வேலை இழப்புகளும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இவற்றின் எதிரொலியாக, வளர்ச்சி விகிதம் குறையும் என கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருக்கிறது.

ஜிடிபி வளர்ச்சி குறையும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்துக்கு முன்பும் பல நிறுவனங்கள் கணித்திருக்கின்றன.

நடப்பு நிதி ஆண்டில் 13.6 சதவீத வளர்ச்சி இருக்கும் என நொமுரா முன்பு கணித்திருந்தது. ஆனால், தற்போது 12.6 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என நொமுரா கணித்திருக்கிறது. அதேபோல, ஜேபி மார்கன் நிறுவனம் 13 சதவீத வளர்ச்சியில் இருந்து 11 சதவீத வளர்ச்சியாக குறையும் என கணித்திருக்கிறது.

மேலும், யுபிஎஸ் நிறுவனம் 11.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என முன்பு கணித்திருந்தது. ஆனால், இரண்டாம் அலை தீவிரமானதால் நடப்பு நிதி ஆண்டில் 10 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என கூறியிருக்கிறது.

ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டின் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 10.5 சதவீதமாக இருக்கும் என கணித்திருக்கிறது. அதேபோல, உலக வங்கி 10.1 சதவீத வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறது.

பெருந்தொற்றுக்கு முன்பு இருந்தே இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்து வந்தது. 2017-ம் நிதி ஆண்டில் 8.3 சதவீத வளர்ச்சி இருந்தது. அடுத்தடுத்த நிதி ஆண்டுகளில் 6.8 சதவீதம் மற்றும் 6.5 சதவீதமாக குறைந்தது. 2020-ம் நிதி ஆண்டில் சதவீதமாக இருந்தது. 2021-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீதம் வரை சரியக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com