2வது நாளாக சரிந்தது தங்கம் விலை : சவரனுக்கு ரூ.90 குறைவு

2வது நாளாக சரிந்தது தங்கம் விலை : சவரனுக்கு ரூ.90 குறைவு
2வது நாளாக சரிந்தது தங்கம் விலை : சவரனுக்கு ரூ.90 குறைவு
Published on

அமெரிக்க உற்பத்தி வீழ்ச்சி குறைந்ததன் எதிரொலியாக உலக சந்தையில் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

உலக சந்தைகளில் முதலீடு செய்யப்படும் வணிகத்தில் முன்னிலையில் தங்கம் உள்ளது. இந்தியாவில் தங்கத்திற்கு வாடிக்கையார்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. இந்நிலையில் அமெரிக்க உற்பத்தி திறன் கடந்த 10 ஆண்டுகளில் 2.44 சதவிகிதத்திலிருந்து 2.41  சதவிகிதமாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக தங்கத்தின் உலக சந்தையில் சரிவை கண்டுள்ளது. 

அதன்படி, இன்றைய தினம் 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 110 குறைந்து ரூ.33,060 ஆக மாறியுள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சந்தை மதிப்பில் ரூ.26,400 உள்ளது. அதேசமயம் வெள்ளியின் மதிப்பு சற்று உயர்ந்து, கிலோவிற்கு ரூ.20 அதிகரித்துள்ளது. வெள்ளி நாயணங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் செய்யும் நிறுவனங்களின் கொள்முதல் அதிகரிப்பால் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை கடந்த 24ஆம் தேதி ரூ.24,656 விற்ற ஒரு சவரன் (22 காரட்) தங்கத்தின் விலை, இன்று ரூ.24512 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com