நாட்டின் தங்கம் இறக்குமதி நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் 47.42 சதவீதம் சரிவடைந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2020 ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், தங்கம் இறக்குமதி 47.42 சதவீதம் சரிவுற்றுள்ளதாகவும், இந்தக் காலகட்டத்தில் ரூ.69,000 கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பேரிடரின் தாக்கத்தின் எதிரொலியாக தேவை குறைந்ததே தற்போது தங்கம் இறக்குமதியில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கான காரணமாகத் தெரிகிறது.