புதிய சி.இ.ஓ நியமனத்தால் உயர்ந்த கோத்ரேஜ் நிறுவனப் பங்குகள்!

புதிய சி.இ.ஓ நியமனத்தால் உயர்ந்த கோத்ரேஜ் நிறுவனப் பங்குகள்!
புதிய சி.இ.ஓ நியமனத்தால் உயர்ந்த கோத்ரேஜ் நிறுவனப் பங்குகள்!
Published on

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சுதிர் சீதாபதி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றியவர். இவரது நியமனத்தால் கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட் பங்குகள் அதிகபட்சமாக 25 சதவீதம் வரை உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில் 21 சதவீதம் உயர்ந்து ரூ.872-ல் முடிவடைந்தது.

சுதிர் சீதாபதி தற்போது ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருக்கிறார். மேலும், உணவுப் பிரிவினை கவனித்துகொள்கிறார். தவிர, நிறுவனத்தின் பல முக்கிய பொறுப்புகள் மற்றும் நிறுவனத்தின் சர்வதேச அளவில் முக்கிய பொறுப்புகளை இவர் வகித்திருக்கிறார்.

தனிப்பட்ட காரணத்தால் நிறுவனத்தில் இருந்து வெளியேற இருப்பதாக கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கோத்ரெஜ் நிறுவனத்தில் இணைய இருக்கிறார்.

மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பிஎஸ்சி பட்டமும், ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாகமும் படித்தவர். வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் கோத்ரெஜ் நிறுவனத்தில் இணைய இருக்கிறார். இவரது நியமனத்தை பல பங்குச்சந்தை நிறுவனங்களும் சந்தை வல்லுநர்கள் சாதகம் என கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதனால், இந்தப் பங்கு 20 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது.

இவரது நியமனம் விவாதிக்கப்படுவதற்கு மற்றொரு காரணம், இவர் எழுதிய புத்தகம்தான். THE CEO FACTORY: Management Lessons from Hindustan Unilever என்னும் புத்தகம்தான். இந்தப் புத்தகம் கடந்த ஆண்டு பரவலான அனைவரது கவனத்தையும் பெற்றது.

ஹெச்யுஎல் நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் பல நிறுவனங்களின் தலைமை பொறுப்பினை ஏற்றிருக்கிறார். ஹெச்யூஎல் எப்படி தலைவர்களை உருவாக்குகிறது என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படை. தற்போது சி.இ.ஓகளின் பட்டியலில் சுதிர் சீதாபதியும் இணைந்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com