'கோ ஏர்' விமான நிறுவனம் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபிஓ பணிகள் முடிவடையும் என தெரிகிறது. இந்த நிலையில் 'கோ ஏர்' என்னும் பெயரை 'கோ ஃபர்ஸ்ட்' என பெயர் மாற்றம் செய்திருக்கிறது.
குறைந்த கட்டண விமான நிறுவனத்தில் இருந்து (எல்சிசி - Low cost carrier) மிகவும் குறைந்த கட்டண விமான நிறுவனமாக (யுஎல்சிசி - ultra-low cost carrier (ULCC)) மாற இருக்கிறது. மிகவும் குறைந்த கட்டண விமான நிறுவனத்தில் கட்டணம் குறைவாக இருக்கும்.
ஆனால், அனைத்து சேவைகளுக்கு இதர கட்டணம் வசூலித்துக்கொள்ள முடியும். கூடுதல் பெட்டிகளை (லக்கேஜ்) எடுத்துச் செல்லுதல், இருக்கை தேர்வு, உணவு உள்ளிட்ட சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்துக்கொள்ள முடியும்.
கோவிட் தாக்குதால் விமான போக்குவரத்துத் துறை பெரும் தாக்கத்தை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் பிஸினஸ் மாடலில் இதுபோன்ற மாற்றம் தேவை என விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2014-ம் ஆண்டு சமயத்தில் சந்தையில் 10 சதவீதத்துக்கு மேலான சந்தையை வைத்திருந்தது. ஆனால், தற்போது 7 சதவீத சந்தை மட்டுமே இருப்பதால் மிகவும் குறைந்த கட்டண விமான நிறுவனமாக மாறி இருக்கிறது.
இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் குறைந்த கட்ட விமான நிறுவனங்களாக (எல்.சி.சி.) செயல்பட்டுவருகின்றன.
2005-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டதில் இருந்து 2019-ம் நிதி ஆண்டு வரை இந்த நிறுவனம் லாபம் ஈட்டியது. 2020-ம் நிதி ஆண்டில் ரூ.1,278 கோடி அளவுக்கு நஷ்டம் ஈட்டியது.