ஃபோர்ட் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா ராஜினாமா

ஃபோர்ட் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா ராஜினாமா
ஃபோர்ட் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா ராஜினாமா
Published on

ஃபோர்ட் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் என ஃபோர்ட் நிறுவனம் அறிக்கை வழியாக அறிவித்துள்ளது. ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் உற்பத்தி இயக்குநராக இருக்கும் பாலசுந்தரம் ராதாகிருஷ்ணன் புதிய அதிகாரியாக, அக்டோபர் 21 ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறார்.

அந்த அறிக்கையில், “பாலசுந்தரம் ராதாகிருஷ்ணன், இடைக்கால பணியை மேற்கொள்வார். இந்தியாவில் கார் உற்பத்தி நிறுத்துப்படுகிறது. இறக்குமதி மூலம் ஃபோர்ட் கார்கள் விற்பனையும், இன்ஜின் தயாரிப்பு போன்றவையும் தொடர்ச்சியாக நடைபெறும். வரும் காலத்தில் இந்தியாவில் எலெட்ரிக் கார் விற்பனையையும் தொடங்கப்பட உள்ளது.

பங்குதாரர்கள், வாடிக்கையாளர்களுக்கு ஃபோர்ட் எப்போதும் போல தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கும். மறைமலை நகர் ஃபோர்ட் தொழிற்சாலை எக்கோ ஸ்போட் வகை கார் உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த வருடம் வரை தொழிற்சாலை இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ராஜினாமா செய்துள்ள அனுராக் மல்ஹோத்ரா, இரண்டு மாதங்களுக்கு முன்பு பேசுகையில் “நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் நிறுவனத்தை லாப கணக்கில் செயல்பட வைக்க முடியவில்லை” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஃபோர்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பாலசுந்தரம் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருப்பது, இந்தியாவில் இறக்குமதி மற்றும் விற்பனை போன்ற விஷயங்களில் ஃபோர்ட் கவனத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

- பால வெற்றிவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com