இணையதள வணிக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஈபே (ebay) இந்தியா நிறுவனத்தை இணைக்கும் நடவடிக்கை நிறைவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப் பிரபல ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஈபே (ebay) நிறுவனத்தை வாங்கியுள்ளது. இத்தகவலை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈபே இந்தியா நிறுவனத்தை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வாங்குவதாக கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. முன்னதாக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணையும் முடிவை கைவிடுவதாக ஸ்நாப்டீல் நிறுவனம் தெரிவித்த நிலையில், ஈபேவுடன் இணைப்புப் பேச்சு தொடங்கியது.
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டால் இரு நிறுவனங்களின் வளர்ச்சியும், ஆன்லைன் வர்த்தக சேவையின் வாய்ப்புகளும் மேலும் அதிகரிக்கும் என்று ஈபே நிறுவனம் தெரிவித்துள்ளது.