டிஜிட்டல் சந்தையில் ஆடைகள் மற்றும் பேஷன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில், ஏபிஎஃப்ஆர்எல் நிறுவனத்தில் 1500 கோடியை அதாவது 7.8 சதவீத பங்குகளுக்கு முதலீடு செய்கிறது பிளிப்கார்ட் நிறுவனம்.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட், ஆதித்யா பிர்லா பேஷன் அண்ட் ரீடெய்ல் லிமிடெட் (ஏபிஎஃப்ஆர்எல்) நிறுவனத்தில் ரூ .1,500 கோடியை 7.8% பங்குகளுக்கு முதலீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாடைகள், விளையாட்டு ஆடைகள், சாதாரண உடைகள் மற்றும் பேஷன் பொருட்கள் உற்பத்தியில் இந்த முதலீடு முக்கிய பங்கு வகிக்கும் என்று ஏபிஎஃப்ஆர்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட்டின் டிஜிட்டல் சந்தை மற்றும் ஏபிஎஃப்ஆர்எல் நிறுவனத்தின் உற்பத்தி ஆகியவை ஒன்றிணையும்போது மிகப்பெரிய அளவில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த கூட்டணியின் மூலம், பிளிப்கார்ட் குழுமத்தின் இணையவழி தளங்களான பிளிப்கார்ட் மற்றும் மைன்ட்ராவில் வழங்கப்படும் பிராண்டுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும் எனவும் இந்நிறுவனங்கள் கூறுகின்றன.
“ஏபிஎஃப்ஆர்எல் உடனான இந்த கூட்டணியின் மூலம், நாடு முழுவதும் அதிக அளவிலான உடைகள் மற்றும் பேஷன் தயாரிப்புகளை கிடைக்கச் செய்வோம். இந்தியாவில் ஆடைத் துறையின் நம்பிக்கைக்குரிய வாய்ப்பை நாங்கள் நிவர்த்தி செய்வோம் ”என்று பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.