புகழ்பெற்ற ஷாப்பிங் இணையதளமான ஃப்ளிப்கார்ட், ‘மொபைல் போனான்ஸா சேல்’ என்ற பெயரில் ஸ்மார்ட்ஃபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஸ்மார்ட்ஃபோன்களின் விலையை அதிரடியாக குறைத்து விற்பனையை துவக்கியுள்ளது. ‘மொபைல் போனான்ஸா சேல்’ என்று அழைக்கப்படும் இந்த ஆன்லைன் விற்பனை திட்டம் வரும் ஜனவரி 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆப்பிள் ஐஃபோன், கூகுஸ் பிக்ஸெல் உள்ளிட்ட பல ஸ்மார்ட்ஃபோன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிறந்த ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களான சாம்சாங், ஓப்போ, மோட்ரல்லா போன்றவற்றின் மொபைல் ஃபோன்களும் இடம்பெற்றுள்ளன.
ஃப்ளிப்கார்டின் இந்த சேலில், ஆப்பிள் ஐபோன் 8-ன் விலை 54,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 64 ஜிபி ஸ்டோரெஜ் உள்ள இந்த ஃபோனின் விலை 64,000 ரூபாய் ஆகும். ஆனால் ஃபிளிப்கார்டின் தள்ளுபடி விலையில் 17 சதவீதம் விலை குறைக்கப்பட்டு ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 64 ஜிபி ஸ்டோரெஜில் ரூ.12,999-க்கு விற்பனையாகும் ரெட்மி நோட் 4, ஃப்ளிப்கார்டின் மொபைல் போனான்ஸா சேலில் 10,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாம்சாங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ஃபோனின் விலை 17,900 ரூபாயில் இருந்து 33 சதவீத விலை குறைப்பில் ரூ.11,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்களின் விலைகள் அதிரடியான விலைக் குறைப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று ஆரம்பமான ஃப்ளிப்கார்டின் இந்த அதிரடி சேல் வாடிக்கையாளர்களிடம் அதிக கவனத்தை பெற்று வி்ற்பனை ஆகி வருவதாக தெரிகிறது.