ஃபிளிப்கார்ட் நிறுவனம் மளிகை பொருட்களை வீட்டுக்கே நேரடியாக விநியோகிக்கும் சேவையை இந்தியாவில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவில் மேலும் 50 நகரங்களுக்கு விரிவுப்படுத்துகிறது ஃபிளிப்கார்ட்.
இதன் மூலம் 7 பெருநகரங்களை சார்ந்த ஃபிளிப்கார்ட் பயனர்களும், 40க்கும் மேற்பட்ட சிறு நகரங்களை சேர்ந்த பயனர்களும் பயனடைவார்கள் என ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. தரமான பொருட்களுக்கான தேவை சந்தையில் இருப்பதால் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
200 பிரிவுகளில் 7000-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஃபிளிப்கார்ட் GROCERY சேவையில் கிடைக்கிறது. “சந்தையில் எங்களது மளிகை பொருட்களுக்கு தேவை இருப்பதை கவனித்தோம். வீட்டிலேயே பத்திரமாக இருந்தபடி மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறுவது ஒரு டிரெண்ட். அது இந்தியாவில் தொடரும்” என ஃபிளிப்கார்ட் GROCERY சேவையின் மூத்த அதிகாரியான மனிஷ் குமார் தெரிவித்துள்ளார்.